பாடத்தெரிவுகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளின் அடிப்படையில் உயர் தரத்தில் எந்தத் துறையில் கற்பது என்பதை தீர்மானித்த பின்னர், குறித்த துறைகளில் காணப்படும் பாடங்கள் மற்றும் பாடத்தெரிவு முக்கியத்துவம் பெறுகின்றன.

இப்பதிவு க.பொ.த உயர் தரத்தின் கலைத்துறைப் பாடங்களின் தெரிவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான அடிப்படை புரிதலை இக்கட்டுரை வழங்கும்

க.பொ.த(உ.த) ல் ஆறு பிரிவுகள் உள்ளன. அவையாவன.

கலைப்பிரிவு
வணிகவியல் பிரிவு
உயிரியல் விஞ்ஞானப் பிரிவு
பௌதிக விஞ்ஞானப் பிரிவு
பொறியியல் தொழில்நுட்ப பிரிவு
உயிரி முறைமைகள் தொழில்நுட்ப பிரிவு

1. கலைப்பிரிவு

க.பொ.த(உ/த) கலைப்பிரிவில் அதிகமான பாடங்கள் காணப்படுவதால், பாடங்கள் நான்கு தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நான்கு தொகுதிகளிலிருந்தும் மூன்று பாடங்களை மாணவர்கள் தெரிவு செய்ய வேண்டும்.

தொகுதி – 01 சமூக விஞ்ஞானம்/ பிரயோக சமூக கற்கைகள்

பொருளியல்
புவியியல்
வரலாறு
மனைப் பொருளியல்
விவசாய விஞ்ஞானம்/ கணிதம் / இணைந்த கணிதம்
தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளும்
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்
கணக்கீடு/ வணிகப் புள்ளிவிபரவியல்
அரசியல் விஞ்ஞானம்
அளவையியலும் விஞ்ஞான முறையூம்
தொழில்நுட்ப பாடங்களிலிருந்து ஒருபாடம்
குடிசார் தொழில்நுட்பம்
மின், இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
விவசாயத் தொழில்நுட்பம்
பொறிமுறை தொழில்நுட்பம்
உணவுத் தொழில்நுட்பம்
உயிர் வள தொழில்நுட்பம்

தொகுதி 01 இல் பாடங்களைத் தெரிவு செய்வதற்கான வழிகாட்டல்

மாணவர்கள் இப்பாடத்தொகுதியிலிருந்து ஒரு பாடத்தையேனும் தெரிவுசெய்தல் வேண்டும். இத் தொகுதியிலிருந்து மாணவர்கள் எல்லா மூன்று பாடங்களையூம் தெரிவு செய்யலாம். இருப்பினும் மூன்று விதிவிலக்குகள் உண்டு.

மாணவர்கள் மூன்று தேசிய மொழிகள்: சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களை தெகுதி 04 இலிருந்து தெரிவு செய்யின் தொகுதி 01 இலிருந்து எந்த பாடத்தையூம் தெரிவுசெய்ய வேண்டியதில்லை.

தேசிய மொழிகள் மற்றும் சாஸ்திரிய மொழிகளின் இணைப்பினை தெரிவு செய்யூம் மாணவர்கள் தொகுதி 01 இலிருந்து எந்தவொரு பாடத்தினையூம் தெரிவு செய்ய வேண்டியதில்லை.

மாணவர்கள் இரு மொழிகளை தொகுதி 04 இலிருந்தும் மற்றும் மூன்றாவது பாடத்தை சமயங்களும் நாகரீகங்களும் தொகுதியிலிருந்தோ அல்லது அழகியற் கற்கைகள் தொகுதியிலிருந்தோ தெரிவு செய்யின் தொகுதி 01 இலிருந்து எந்தவொரு பாடத்தையூம் தெரிவு செய்ய வேண்டியதில்லை.

தொகுதி 02 – சமயங்களும் நாகரீகங்களும்.

பௌத்தம்
இந்து சமயம்
கிறிஸ்தவம்
இஸ்லாம்
பௌத்த நாகரீகம்
இந்து நாகரீகம்
கிறிஸ்தவ நாகரீகம்
இஸ்லாமிய நாகரீகம்
கிரேக்க நாகரீகம்

தொகுதி 02 இல் பாடங்களைத் தெரிவூ செய்வதற்கான வழிகாட்டல்

மாணவர் தொகுதி 02 இலிருந்து ஆகக்கூடுதலாக இரு பாடங்களையே தெரிவு செய்ய முடியூம்.

இருப்பினும் சமயத்தினை ஒரு பாடமாக தெரிவூ செய்தால் அந்த சமயம் தொடர்பான நாகரீகத்தை அதாவது இந்த தொகுதியிலிருந்து மற்றுமொரு பாடமாக தெரிவூ செய்ய முடியாது.

தொகுதி 03 – அழகியற் கற்கைகள் அழகியற் கற்கைகள் பின்வரும் நான்கு பிரிவூகளைக் கொண்டுள்ளது.

வரைதல்
நடனம்
சங்கீதம்
நாடகமும் அரங்கியலும்

இப்பிரிவூ மேலும் பின்வரும் உப பிரிவகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

வரைதல்

நடனம்
I. சிங்களம்
II. பரதம்

சங்கீதம்
I. கீழைத்தேய
II. கர்நாடக
III. மேலைத்தேய

நாடகமும் அரங்கியலும்

I. சிங்களம்
II. தமிழ்
III. ஆங்கிலம்

தொகுதி 03 இல் பாடங்களைத் தெரிவூசெய்வதற்கான வழிகாட்டல் மேற்குறிப்பிட்டுள்ள 4 பிரிவூகளிலிருந்து இரு பாடங்களைத் தெரிவூ செய்ய முடியூம்.

தொகுதி 04 – மொழிகள்: 

இத்தொகுதி 3 பாடப் பிரிவூகளைக் கொண்டது.

தேசிய மொழிகள்
சாஸ்திரிய மொழிகள்
வெளிநாட்டு மொழிகள்

1. தேசிய மொழிகள்

• சிங்களம்
• தமிழ்
• ஆங்கிலம்

2. சாஸ்திரிய மொழிகள்

• அரபு
• பாளி
• சமஸ்கிருதம்

3. வெளிநாட்டு மொழிகள்

• சீன மொழி
• பிரெஞ்சு
• ஜேர்மன்
• ஹிந்தி
• ஜப்பான் மொழி
• மலாய்
• ரசியன் மொழி

தொகுதி 04 இல் பாடங்களைத் தெரிவூ செய்வதற்கான வழிகாட்டல்.

இத்தொகுதியிலிருந்த மாணவர்கள் ஆகக் கூடுதலாக இரு பாடங்களைத் தெரிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.

உ-ம்: மாணவர்கள் மூன்று பாடங்களைத் தெரிவூ செய்கையில் தொகுதி 4 இல் இருந்து சீனம் மற்றும் பிரெஞ்சு ஆகிய பாடங்களை தெரிவூசெய்து மூன்றாவது பாடத்தை ஏனைய தொகுதியிலிருந்து தெரிவ செய்யலாம்.

இருப்பினும் இதற்கு விதிவிலக்கான சந்தர்ப்பங்களும் உண்டு..

ஒரு மாணவர் மூன்று தேசிய மொழிகளை தெரிவூ செய்யலாம்.

உ-ம்: சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ்

ஒரு மாணவர் ஒரு தேசிய மொழியையூம் அத்துடன் இரண்டு சாஸ்திரிய மொழிகளையூம் தெரிவூ செய்யலாம்.

மாணவர்கள் மூன்று சாஸ்திரிய மொழிகளை அல்லது மூன்று வெளிநாட்டு மொழிகளை தெரிவூசெய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மூலம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 2018 ஆம் ஆண்டுக்கான கையேடு

AH.SAFEER MOHAMED (Safeer Hameed)
Teacher in political science
KM/Mahmoud ladies college
Kalmunai

Post a Comment

Previous Post Next Post